×

‘சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி’ கோவை பெண் காவலருக்கு கொரோனா உறுதி!

கோவையில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரக் கணக்கான மக்கள் கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பரவி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே . தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,5 செவிலியர்கள்
 

கோவையில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரக் கணக்கான மக்கள் கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பரவி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே . தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,5  செவிலியர்கள் மற்றும் காவலர்களுக்கு கொரோனா பரவியுள்ள நிலையில் கோவையில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கோவை அன்னூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இந்த பெண்  காவலருக்கு வயது 40. கொரோனா தொற்று இருப்பவர்களின் இடத்தில் கூட அந்த வைரஸ் பரவுவதால், அந்த இடங்கள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு, அன்னூர்-அவினாசி சாலையில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்ட போது இவருக்கு கொரோனா தொற்று பரவியுதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.