×

‘கிராமப்புற பாடகியின் குரல் ஓய்ந்தது’….பரவை முனியம்மா மறைவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

சமீபத்தில் கிட்னியில் ஏற்பட்ட பிரச்னையால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். தமிழில் தூள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்தும், குத்தாட்டம் போட வைத்தும் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் பகுதியை சேர்ந்தவர். வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந் இவர், சமீபத்தில் கிட்னியில் ஏற்பட்ட பிரச்னையால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை
 

சமீபத்தில் கிட்னியில் ஏற்பட்ட பிரச்னையால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

தமிழில் தூள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்தும், குத்தாட்டம் போட வைத்தும் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் பகுதியை சேர்ந்தவர்.

வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந் இவர், சமீபத்தில் கிட்னியில் ஏற்பட்ட பிரச்னையால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரவை முனியம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.நாட்டுப்புற பாடல்களால் தமிழ்நாட்டு மக்களை உற்சாகப்படுத்திய கிராமப்புற பாடகியின் குரல் ஓய்ந்தது.அவரது இழப்பு நாட்டுப்புற கலைக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.