×

ஹெல்மெட் அணியாமல் சென்ற இளம்பெண்: போலீசார் லத்தியால் தடுத்து நிறுத்தியதால் நேர்ந்த சோகம்!

செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த லாரி, அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. செங்குன்றம் : ஹெல்மெட் அணியாமல் சென்றதாக இளம்பெண்ணை காவல்துறையினர் தடுத்ததால் அப்பெண்ணை லாரி ஒன்று மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் யுவனேஷ். இவர் மனைவி பிரியதர்ஷினி. சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றிரவு பிரியதர்ஷினி தனது தாய் பிறந்தநாளுக்கு கேக் வாங்க, காவல் உதவி மையம்
 

செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக  வந்து கொண்டிருந்த லாரி, அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

செங்குன்றம் : ஹெல்மெட் அணியாமல் சென்றதாக இளம்பெண்ணை காவல்துறையினர் தடுத்ததால் அப்பெண்ணை லாரி ஒன்று மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த  செங்குன்றம்  பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் யுவனேஷ். இவர்  மனைவி  பிரியதர்ஷினி. சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றிரவு பிரியதர்ஷினி தனது தாய் பிறந்தநாளுக்கு கேக் வாங்க,  காவல் உதவி மையம் அருகில் உள்ள பேக்கரிக்கு வந்தார். அப்போது கேக் வாங்கிக்கொண்டு செங்குன்றம்- திருவள்ளூர் சாலையில் சென்றுள்ளார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த  சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அவ்வழியே ஹெல்மெட் அணியாமல் வந்த பிரியதர்ஷினியை லத்தியால் தடுத்து நிறுத்தினர். 
அப்போது செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக  வந்து கொண்டிருந்த லாரி, அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிரியாவின் கால்கள் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது கால்கள் நசுங்கின. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பிரியாவை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்  சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரியாவின் இந்த விபத்திற்கு போலீசாரே காரணம்  என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நிறுத்தி வைத்திருந்த போலீசாரின் ரோந்து வாகனத்தையும் அவர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், பொன்னேரி டி.எஸ்.பி. பவன்குமார் ரெட்டி, சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால்  அதில் உடன்பாடு  ஏற்படாததால் போலீசார் அங்குத் தடியடி நடத்தினர். 

இதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.