×

வைகாசி மாத அமாவாசையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதன் பலன்கள்

வைகாசி மாதத்தின் அமாவாசையில் தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபாடு செய்வதன் மூலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திலும் வளம் செழிக்கும் என ஆச்சார்யர்கள் கூறுகின்றனர். வைகாசி மாதத்தின் அமாவாசையில் தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபாடு செய்வதன் மூலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திலும் வளம் செழிக்கும் என ஆச்சார்யர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் முன்னோரை வழிபடுவதற்கு என ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான நாட்களாக 96 நாட்கள் இருப்பதாக ஆச்சார்யர்கள்
 

வைகாசி மாதத்தின் அமாவாசையில் தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபாடு செய்வதன் மூலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திலும் வளம் செழிக்கும் என ஆச்சார்யர்கள் கூறுகின்றனர்.

வைகாசி மாதத்தின் அமாவாசையில் தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபாடு செய்வதன் மூலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திலும் வளம் செழிக்கும் என ஆச்சார்யர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் முன்னோரை வழிபடுவதற்கு என ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான நாட்களாக 96 நாட்கள் இருப்பதாக ஆச்சார்யர்கள் கூறியுள்ளனர். அமாவாசை என்பதே முன்னோருக்கான நல்ல நாள் தான் என்பது ஐதீகம். அதனால், அமாவாசையில் முன்னோரை நினைத்து அவர்களின் புகைப்படங்களுக்கு மலர்களால் அலங்கரிப்பதும், தூபதீபங்கள் காட்டி ஆராதனை செய்வதும் நமக்கு மிகுந்த பலன்களை தரும்.

அந்தவகையில் வருகிற 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வைகாசி அமாவாசை நாள் ஆகும். இந்தநாளில், மறக்காமல் முன்னோரின் படங்களுக்கு மாலை அணிவித்து வழிபடுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து, அதை காகத்துக்கு உணவாக அளிக்க வேண்டும்.

அத்துடன் முன்னோரை நினைத்து நம்மால் முடிந்த குறைந்தபட்சம் நான்கு பேருக்காவது தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என இவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம். இதன் மூலம் வீட்டில் இதுவரை நிம்மதியோ, சந்தோஷமோ இல்லை என்றால் அவை உங்கள் வீடு தேடி வரும். தம்பதிகள் இடையே ஒற்றுமை மேலோங்கும். நம்மைப் பிடித்த தரித்திரங்கள் விலகும். முன்னோர்களை வழிபட்டால் அவர்கள் நம் வாழ்க்கையையே வளமாக்குவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்!