×

வேதாரண்ய கலவரத்தில் உடைக்கப்பட்ட  அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலை!

வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியதில் அங்கு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக வேறு புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியதில் அங்கு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக வேறு புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்து
 

வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியதில் அங்கு அம்பேத்கர்  சிலை உடைக்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக வேறு புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. 

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியதில் அங்கு அம்பேத்கர்  சிலை உடைக்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக வேறு புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் பாண்டியன் தரப்பினர்,   ராஜேந்திரன் என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், அவரது கால் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் தாக்குதலைத்  தடுக்க முடியவில்லை. இந்த தகராறு கலவரமாக மாறியது. 

குறிப்பாக இந்த கலவரத்தில் ஒருதரப்பினர்  அம்பேத்கர் சிலையை உடைத்ததால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து அதற்குப் பதிலாக அரசு சார்பில்   புதிய சிலை  வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.