×

வேகமாக பரவும் டெங்கு: சென்னையில் இளம்பெண் பரிதாப பலி!

டெங்கு காய்ச்சலுக்கு வேலூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. சென்னை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் பலமாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் பள்ளமாக இடங்களில் நீர் தேங்கி கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கு வேலூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. டெங்குகாய்ச்சலைத் தடுப்பதற்குத் தமிழக அரசும் மாநகராட்சியும்
 

டெங்கு காய்ச்சலுக்கு வேலூர், சென்னை உள்ளிட்ட  பல  மாவட்டங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது.

சென்னை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் பலமாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் பள்ளமாக  இடங்களில் நீர் தேங்கி  கொசுக்களின்  உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கு வேலூர், சென்னை உள்ளிட்ட  பல  மாவட்டங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது.  டெங்குகாய்ச்சலைத் தடுப்பதற்குத் தமிழக அரசும் மாநகராட்சியும் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை. 

இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தை சேர்ந்த லாவண்யா என்ற இளம்பெண் டெங்கு காய்ச்சலால் பலியாகியுள்ளார்.  இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.