×

வெள்ளைக்கார விநாயகரைத் தெரியுமா உங்களுக்கு?

பாண்டிச்சேரி என்கிற புதுச்சேரியின் பழய பெயர் வேதபுரி.இது அத்தனை பழமையான ஊர் அல்ல,ஆனால் புதுச்சேரிக்கு வடக்கில் உள்ள எயிற்பட்டினம் என்கிற மரக்காணமும்,தெற்கில் உள்ள அரிக்க மேடும் மிகப்பழைய துறைமுகங்கள் பாண்டிச்சேரி என்கிற புதுச்சேரியின் பழய பெயர் வேதபுரி.இது அத்தனை பழமையான ஊர் அல்ல,ஆனால் புதுச்சேரிக்கு வடக்கில் உள்ள எயிற்பட்டினம் என்கிற மரக்காணமும்,தெற்கில் உள்ள அரிக்க மேடும் மிகப்பழைய துறைமுகங்கள். புதுவைக்கு ஃபிரஞ்சுக்காரர்கள் வரும் முன்பே இந்த விநாயகர் கோயில் இருந்திருக்கிறது. அப்போது அவருக்கு பசவநேசுவர விநாயகர் என்று
 

பாண்டிச்சேரி என்கிற புதுச்சேரியின் பழய பெயர் வேதபுரி.இது அத்தனை பழமையான ஊர் அல்ல,ஆனால் புதுச்சேரிக்கு வடக்கில் உள்ள எயிற்பட்டினம் என்கிற மரக்காணமும்,தெற்கில் உள்ள அரிக்க மேடும் மிகப்பழைய துறைமுகங்கள்

பாண்டிச்சேரி என்கிற புதுச்சேரியின் பழய பெயர் வேதபுரி.இது அத்தனை பழமையான ஊர் அல்ல,ஆனால் புதுச்சேரிக்கு வடக்கில் உள்ள எயிற்பட்டினம் என்கிற மரக்காணமும்,தெற்கில் உள்ள அரிக்க மேடும் மிகப்பழைய துறைமுகங்கள்.

புதுவைக்கு ஃபிரஞ்சுக்காரர்கள் வரும் முன்பே இந்த விநாயகர் கோயில் இருந்திருக்கிறது. அப்போது அவருக்கு பசவநேசுவர விநாயகர் என்று பெயர். பிரஞ்சு வணிகக் கம்பெனிகள் இங்கே நிலை பெற்ற பிறகு மூன்று முறை இந்தக் கோவிலை இடித்து விநாயரை கடலில் எறிந்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த விநாயகர் சிலை மறுநாள் கரைக்கு திரும்பிவிட்டதாம்.

அதனால் அவர்களே,அந்த விநாயகருக்கு கோவில் கட்டி கொடுத்து விட்டார்களாம். கடற்கரை மணலில் உருவான மணல் குளத்தின் அருகில் இருப்பதால் இவருக்கு மணக்குள வினாயகர் என்று பெயர் ஏற்பட்டது.கோவில் 8000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.கோவிலுக்கு தங்கத்தேரும், வெள்ளித் தேரும் உள்ளன.

1923-ஆம்  ஆண்டில் புதுவை ஓர்லையன் பேட்டையில் இருந்து வெங்கடேசன்  நடத்தி வந்த அச்சுகாபி விருத்தினி என்கிற பத்திரிகையில் நிறைய செய்திகள் வந்துள்ளன.
பாரதியும்,யாழ்பாணம் கந்தையா பிள்ளையும் மணக்குள விநாயகரை பாடியுள்ளனர்.

புதுச்சேரியை டட்சு,டேனிஷ்,போர்த்துக்கீசிய,பிரஞ்சு,ஆங்கிலேயர் என பலர் ஆண்டுள்ளனர்.நான்கு போர்கள் நடந்துள்ளன.ஆனால் மணகுளர் கோவில் சேதமடைந்ததே இல்லை. இவர் இடம்புரி விநாயகர் ஆவார்.கோவிலில் தினமும், மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகின்றது.உலகில் உள்ள எல்லா விநாயகர் வடிவங்களும் இங்கே சுதைச் சிற்பங்களாக வடித்து வைக்கப்பட்டு உள்ளன.

ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: பட்டாசு வெடிக்க அனுமதி; வான வேடிக்கையுடன் கலைகட்டப் போகும் பூரம் திருவிழா?!