×

வெளுத்து வாங்கும் மழை: குற்றால அருவிகளில் குளிக்க தடை!

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாகக் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி
 

வடகிழக்கு பருவ மழை  துவங்கியுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை  துவங்கியுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் நேற்று  மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 

இந்நிலையில் கனமழை காரணமாகக் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.  இதனால் பாறைகள் விழும் அபாயமும் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி  சுற்றுலாப் பயணிகள்  அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.