×

வெளியில் வந்த பாண்டியர் கால மண்டபம் ! வறண்ட  ஆற்றுக்குள் மேலெழுந்த பொக்கிஷம்!

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறு நீரின்றி வறண்ட நிலையில் ஆற்றுக்குள் புதைத்திருந்த 13ம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியனின் அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மண்டபம் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறு நீரின்றி வறண்ட நிலையில் ஆற்றுக்குள் புதைத்திருந்த 13ம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியனின் அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள்
 

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறு நீரின்றி வறண்ட நிலையில் ஆற்றுக்குள் புதைத்திருந்த 13ம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியனின் அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மண்டபம் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறு நீரின்றி வறண்ட நிலையில் ஆற்றுக்குள் புதைத்திருந்த 13ம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியனின் அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மண்டபம் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்பாக்கி வந்த ஜீவ நதியான தாமிரபரணி தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கி விடுவதால் கடைமடை பகுதியில் வறண்டு காணப்படுகிறது. பாபநாசம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அணையின் நீர்மட்டம் உயர்ந்தாலும் தாமிரபரணியில் போதுமான நீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில்,வறண்ட தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கி இருந்த பாண்டியர் கால அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தாமிரபரணியில் தண்ணீர் நிரம்பி இருக்கும் போது ஆற்றுக்குள் கோவில் மண்டபம் ஒன்று உள்ளது என்று பல ஆண்டுகளாக அந்த பகுதி பெரியவர்கள் கூறுவதுண்டு. அந்த செய்தி உண்மை தான் என்று தற்போதைய தலைமுறை அதிசயத்துடன் பாண்டியர் கால மண்டபத்தைப் பார்க்கத் தொடங்கியிருகிறது.

ஆற்றுக்குள் புதைந்து இருப்பது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களின் அரண்மனையாக இருக்கலாம் என்று விவரிக்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். பண்டைய தாமிரபரணி நதிகரை நாகரீகத்தை கண்டறிய தொல்லியல் துறை இங்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க ஆற்றுக்குள் புதைந்து இருப்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிவேல் செழிய பாண்டியனால் கட்டப்பட்ட வெற்றிவேல் அம்மன் கோவில் மண்டபம் என்றும் கூறப்படுகிறது.

மதுரை கீழடியைப் போன்று பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ள தாமிரபரணி ஆற்றில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு மண்டபம் முழுவதுமாக வெளிக் கொண்டு வரப்படும் நிலையில் தாமிரபரணி நாகரிகத்தின் சிறப்பை முழுவதுமாக அறிந்து கொள்ள இயலும் என்ற கருத்தும் பொதுமக்களிடையே நிலவுகிறது.