×

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டாம் – முதல்வர் பழனிசாமி

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களில் பலர் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது நாள்தோறும் செய்தியாகி வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று காலை கோர விபத்து ஏற்பட்டது. லாரியில் தங்கள் சொந்த மாநிலத்திற்கு
 

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களில் பலர் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது நாள்தோறும் செய்தியாகி வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று காலை கோர விபத்து ஏற்பட்டது. லாரியில் தங்கள் சொந்த மாநிலத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக பலியாகினர். ராஜஸ்தானிலிருந்து கிளம்பி, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் சென்றடைவதற்காக பயணம் செய்த அவர்கள் லக்னோ அருகில் அவுரியா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் பயணம் செய்த லாரியானது, மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து நடந்து செல்லவோ அல்லது அனுமதி இல்லாமல் வாகனத்தில் செல்லவோ வேண்டாம் என முதல்வர் பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களுக்கான ரயில் கட்டணம் உட்பட எல்லா பயணச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.