×

வீடு புகுந்து நகை திருடிய இளைஞர்களை கும்மாங்குத்து குத்திய பொதுமக்கள் !

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் அடிக்கடி கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் அடிக்கடி கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வந்துள்ளனர். அதே போல, கடந்த சனிக் கிழமை அப்துல்ஹமீது என்ற நபரின் வீட்டில் 24 சவரன் நகை மற்றும் ரூ. 54,000 பணத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து அப்துல்ஹமீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
 

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் அடிக்கடி கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் அடிக்கடி கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வந்துள்ளனர். அதே போல, கடந்த சனிக் கிழமை அப்துல்ஹமீது என்ற நபரின் வீட்டில் 24 சவரன் நகை மற்றும் ரூ. 54,000 பணத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இது குறித்து அப்துல்ஹமீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஒரே பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடப்பதால் அந்த பகுதியைச் சேர்ந்த இம்ரான் மற்றும் மோகன்ராஜ் மீது பொதுமக்களுக்குச் சந்தேகம் வந்துள்ளது. 

அந்த இரண்டு நபர்களும் அடிக்கடி எல்லா வீடுகளையும் நோட்டமிட்டுச் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், பொது மக்கள் அவர்கள் இரண்டு பேரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று மழுப்பியுள்ளனர்.

அதனை நம்பாத மக்கள் மீண்டும் அவர்களை மிரட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இம்ரான் மற்றும் மோகன்ராஜ் ” அப்துல்ஹமீது வீட்டில் நாங்கள் தான் திருடினோம் என்று பயந்து ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள் அங்கிருந்த கம்பு, கட்டை உள்ளிட்ட பொருட்களை வைத்து சரமாரியாக இருவர்களையும் தாக்கி காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.