×

விழித்திருப்போம்.. தனித்திருப்போம் : திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீடியோ!

கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் கொடிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முடியவில்லை. இந்தியாவில் தற்போதைய நிலவரத்தின் படி, கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. அதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 26 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 21
 

கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

நாடு முழுவதும் கொடிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முடியவில்லை. இந்தியாவில் தற்போதைய நிலவரத்தின் படி, கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. அதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 26 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “கொரோனா வைரஸால் தினமும் கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், பிரதமர் மோடி பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை நான் வரவேற்கிறேன். அதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரணம், கூலித் தொழிலாளிகளுக்கு  போதுமானது அல்ல. அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு பெரும் தொகையை ஒதுக்க வேண்டும். 

 

தமிழக மக்களுக்கு நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.1,000த்தை ரூ.5,000 ஆக வழங்க வேண்டும். அவசர காலத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்  துறையினர், ஊடகத்தினர், துப்புரவு ஊழியர்களுக்கு எப்படி நன்றி  சொல்வது என தெரியவில்லை. உங்களின் உதவி மகத்தானது. தனித்திருப்போம்..விழித்திருப்போம்!” என்று கூறியுள்ளார்.