×

விருதுநகர் மாவட்டத்தில் 3000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அம்மாவட்டத்தில் ஏற்கனவே 2,749 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 273 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்து 3022 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த 57 பகுதிகளில் கடந்த 12 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.