×

வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி.. கோயம்பேடு மார்க்கெட்டின் தற்போதைய நிலவரம்!

ஊரடங்கு இருப்பினும் பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியவசிய கடைகள் மூடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த கொடூரமான வைரஸால் தமிழகத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். பிரதமர் மோடி இந்தியா முழுவதிலும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் முறையாக பின்பற்றுகிரார்களா என்று கண்காணிக்க காவல் படைகள் போடப்பட்டுள்ளன.
 

ஊரடங்கு இருப்பினும் பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியவசிய கடைகள் மூடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த கொடூரமான வைரஸால் தமிழகத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். பிரதமர் மோடி இந்தியா முழுவதிலும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் முறையாக பின்பற்றுகிரார்களா  என்று கண்காணிக்க காவல் படைகள் போடப்பட்டுள்ளன. 

ஊரடங்கு இருப்பினும் பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியவசிய கடைகள் மூடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. வழக்கமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட், தற்போது கூட்டமில்லாமல் காணப்படுகிறது. இதனிடையே வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.