×

விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது : கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி

இழப்பு இந்தியாவுக்கு வரக் கூடாது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் தோல்வி அடைந்துள்ளதால், அத்தகைய இழப்பு இந்தியாவுக்கு வரக் கூடாது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எந்த மாநில
 

இழப்பு இந்தியாவுக்கு வரக் கூடாது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் தோல்வி அடைந்துள்ளதால், அத்தகைய இழப்பு இந்தியாவுக்கு வரக் கூடாது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எந்த மாநில அரசுகளும் விமர்சிக்கவில்லை. ஆனால் மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பிரதமர் மோடியின் நடவடிக்கையை விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். அதனைப்பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது, நல்ல ஆலோசனைகளை வழங்கலாம் என்று கூறினார். மேலும், கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்த அவர், அஜித்தை போல அனைத்து நடிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.