×

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்: குவியும் பாராட்டுக்கள்..

அமர்ந்திருந்த அவரது மனைவியும் குழந்தையும் கீழே விழுந்துள்ளனர். அதில், அவரது குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஆனந்த கிருஷ்ணன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, இரு சக்கர வாகனத்தை உரசியது போல் சென்றுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த கிருஷ்ணன் வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பின்னால் , அமர்ந்திருந்த அவரது மனைவியும்
 

அமர்ந்திருந்த அவரது மனைவியும் குழந்தையும் கீழே விழுந்துள்ளனர். அதில், அவரது குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஆனந்த கிருஷ்ணன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, இரு சக்கர வாகனத்தை உரசியது போல் சென்றுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த கிருஷ்ணன் வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பின்னால் , அமர்ந்திருந்த அவரது மனைவியும் குழந்தையும் கீழே விழுந்துள்ளனர். அதில், அவரது குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

என்ன செய்வதென்று அறியாத ஆனந்த கிருஷ்ணன், ஆம்புலன்ஸை அழைக்க முயன்றுள்ளார். அச்சமயம் பார்த்து ஆம்புலன்ஸ் ஏதும் வரவில்லை. சம்பவம் நடந்த வழியே வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி விசாரித்துள்ளார்.  அதில், குழந்தைக்குக் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆம்புலன்ஸ் ஏதும் வராததால், அமைச்சருக்குப் பாதுகாப்பு அளிக்க வந்தவர்கள் காரில் ஆனந்த கிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் குழந்தையை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அமைச்சரின் மனித நேயம் மிக்க செயலால் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.