×

விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய அமைச்சர் வீரமணி !

செல்லும் வழியில், காரியக்குடல் பகுதியைச் சேர்ந்த கோட்டி என்பவர் சாலை விபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போரடிக் கொண்டிருந்துள்ளார். வேலூர் மாவட்டம் நெமிலியில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்னர் வருமான வரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார். செல்லும் வழியில், காரியக்குடல் பகுதியைச் சேர்ந்த கோட்டி என்பவர் சாலை விபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போரடிக் கொண்டிருந்துள்ளார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்
 

செல்லும் வழியில், காரியக்குடல் பகுதியைச் சேர்ந்த கோட்டி என்பவர் சாலை விபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போரடிக் கொண்டிருந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் நெமிலியில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்னர் வருமான  வரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார். செல்லும் வழியில், காரியக்குடல் பகுதியைச் சேர்ந்த கோட்டி என்பவர் சாலை விபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போரடிக் கொண்டிருந்துள்ளார்.  அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை அழைக்க முயற்சி செய்தும், எந்த ஆம்புலன்ஸும் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

அடிபட்டவரைக் கண்ட அமைச்சர் வீரமணி உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கியுள்ளார். அதன் பின், அடிபட்டவரின் அருகே சென்று விசாரித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வெகு நேரமாக வராததை அறிந்த அமைச்சர், அவருடன் சென்ற அதிமுக உறுப்பினர்கள் வாகனத்தில் அடிபட்ட நபரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.