×

விநாயகரும் சதுர்த்தியும்- விநாயகர் தோன்றிய வரலாறும்.. !

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. இது திருமூலரின் திருமந்திரப் பாடல் ! விநாயகரை தினம்தோறும் போற்றி வழிபடும் நாம் அவர் தோன்றிய வரலாறு மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தோன்றிய வரலாற்று பின்னணி கதையையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.. விநாயகர் சதுர்த்தி வரலாறு குறித்து பல கதைகள் உண்டு. இருப்பினும் பரவலாக நம்பக்கூடிய ஆன்மீக பின்னணியை தெரிந்துகொள்ளலாம். சிவபெருமானின் பக்தனாக
 

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

இது திருமூலரின் திருமந்திரப் பாடல் !

விநாயகரை தினம்தோறும் போற்றி வழிபடும் நாம் அவர் தோன்றிய வரலாறு மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தோன்றிய வரலாற்று பின்னணி கதையையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..

விநாயகர் சதுர்த்தி வரலாறு குறித்து பல கதைகள் உண்டு. இருப்பினும் பரவலாக நம்பக்கூடிய ஆன்மீக பின்னணியை தெரிந்துகொள்ளலாம்.

சிவபெருமானின் பக்தனாக அறியப்பட்ட கஜமுகாசுரன் என்பவன் மனிதர்களா லோ, விலங்குகளா லோ, ஆயுதங்களாலோ, யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்தான். அந்த மமதையில் தேவர்களை அவன் துன்புறுத்தியதால், அவனைப்பற்றி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
இதனால் ஆவணி மாத சதுர்த்தி அன்று கஜமுகாசுரனை அழிக்க யானை முகமும் மனித உடலும் (மனிதனும் அல்லாமல் விலங்கும் அல்லாமல்) கொண்ட விநாயகரை சிவபெருமான் படைத்தார்.


பின்னர் கஜமுகாசுரன் உடன் நடந்த கடும் போரின் முடிவில், தனது கொம்புகளில் (வழக்கமான ஆயுதம் இல்லாமல்) ஒன்றை ஒடித்து அவனை விநாயகர் சம்ஹாரம் செய்தார்.
இதன் காரணமாக அனைவரும் சுபிட்சம் பெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதச் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய தினத்தில் விநாயகரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும். சகல சௌபாக்கியங்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.