×

விதியை மீறி நடராஜர் கோயிலில் நடந்த பிரபல பட்டாசு ஆலை அதிபரின் மகள் திருமணம்: கதவை பூட்டிக்கொண்டு நடத்தியதாக புகார்!

ஆயிரங்கால் மண்டபத்தில் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் அங்கு திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பிரபல பட்டாசு ஆலை அதிபரின் மகள் திருமணம் மரபுகளை மீறி வெகு விமர்சையாக நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டுச் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். இந்த மண்டபத்தில் தனியாருக்கு, திருமண நிகழ்ச்சி நடத்தவோ அல்லது
 

ஆயிரங்கால் மண்டபத்தில் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் அங்கு திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பிரபல பட்டாசு ஆலை அதிபரின் மகள் திருமணம் மரபுகளை மீறி வெகு விமர்சையாக நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதத்தில்  நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம்  நடத்தப்பட்டுச் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். இந்த மண்டபத்தில் தனியாருக்கு, திருமண நிகழ்ச்சி நடத்தவோ அல்லது விழாக்களை நடத்தவோ அனுமதி கிடையாது. 

இந்நிலையில்  சிவகாசியைச் சேர்ந்த பிரபல பட்டாசு நிறுவனமான ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் அதிபர் ராஜரத்தினம் மகள் சிவகாமிக்கும் ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர் மகன் சித்தார்த்தன் இருவருக்கும் ஆடம்பரமாக திருமணம் நடந்தது. ராஜரத்தினம் – பத்மா தம்பதியருக்கு மிக நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத நிலையில் சிதம்பரம் நடராஜர் =சிவகாமி அம்பாளை  வேண்டி பிறந்த குழந்தை என்பதால் அக்கோவிலேயே மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். 

இதன் காரணமாக ஆலய பொது தீட்சிதர்களிடம்  உத்தரவு பெற்று இந்த திருமணத்தை நடத்தி இருப்பதாகவும்,  ஆயிரங்கால் மண்டபத்தில் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் அங்கு திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  நடராஜர் கோவில் பூஜை ஸ்தானிகரும், அறங்காவலருமான பட்டு தீட்சிதரோ, அவர் மகளுக்கு இக்கோவிலில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது நடராஜரின் அருள்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.