×

விடிய விடிய காத்திருந்த மக்கள்: விடிந்ததும் ஜீவசமாதி ப்ளானை தள்ளிப்போட்ட சாமியார்!

குழி வெட்டி பூஜைகள், மலர் அலங்காரம், பந்தல் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. சிவகங்கை: ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்த இருளப்ப சாமியார், காலக்கெடு முடிந்ததால் விடிந்ததும் ஜீவசமாதி முடிவை ஒத்திவைத்தார். சிவகங்கையை சேர்ந்த 80 வயது முதியவரான இருளப்ப சுவாமி என்பவர் ஜீவ சமாதி அடையப்போவதாக அறிவித்ததார். நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று அதிகாலை 5 மணிக்குள் அவர் ஜீவ சமாதி அடைய போவதாக அறிவிக்கப்பட்டது. தான் ஜீவசமாதி அடைவதற்கு சிவபெருமான் தன் கனவில் வந்து
 

குழி வெட்டி பூஜைகள், மலர் அலங்காரம், பந்தல் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

சிவகங்கை: ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்த  இருளப்ப சாமியார், காலக்கெடு முடிந்ததால் விடிந்ததும் ஜீவசமாதி முடிவை ஒத்திவைத்தார். 

சிவகங்கையை சேர்ந்த 80 வயது முதியவரான இருளப்ப சுவாமி என்பவர் ஜீவ சமாதி அடையப்போவதாக அறிவித்ததார். நேற்று  நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று  அதிகாலை 5 மணிக்குள் அவர் ஜீவ சமாதி அடைய போவதாக அறிவிக்கப்பட்டது. தான் ஜீவசமாதி அடைவதற்கு சிவபெருமான் தன் கனவில் வந்து சொன்னதே காரணம்  என்று கூறினார். 

இதனால் அவர் தேர்வு செய்த இடத்தில் குழி வெட்டி பூஜைகள், மலர் அலங்காரம், பந்தல் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. இதனால் அப்பகுதியில் ஏராளமான கூட்டம் கூடியது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. நேரம் நெருங்க நெருங்க அங்கு சற்று பதற்றமும் நிசப்தமும் சூழ்ந்து கொண்டது. 

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த   வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள நிலவரத்தை கண்காணித்து வந்தனர். பின்பு இருளப்ப சுவாமிக்கு நடந்த மருத்துவர் பரிசோதனையில் அவரின் உடல் சீராக இருப்பது தெரிந்தது. ,மேலும் அவர் ஜீவசமாதிக்கான காலக்கெடு முடிந்ததால் ஜீவசமாதி முடிவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார் அந்த 80 வயது சாமியார். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.