×

வயலூர்: சுப்பிரமணிய சுவாமி திருகோயிலில் கந்தசஷ்டி விழா வருகின்ற 8 ஆம் தேதி தொடங்குகிறது.

வயலூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வருகின்ற 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடை பெறுகிறது. இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றாக வயலூர் முருகன் கோயில் விளங்குகின்றது. இக்கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான கந்தசஷ்டி விழா வருகிற 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. நவம்பர்
 

வயலூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வருகின்ற 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடை பெறுகிறது.

இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றாக வயலூர் முருகன் கோயில் விளங்குகின்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான கந்தசஷ்டி விழா வருகிற 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடை பெறுகிறது.

நவம்பர் 8 ஆம் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், அபிஷேகமும்நடைபெறுகிறது. அதனையடுத்து இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

நவம்பர் 9 ஆம்  தேதி முதல் 12 ஆம்  தேதி வரை சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சேஷ, அன்னம், வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13 ஆம் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.45 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆடு வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

கந்தசஷ்டி விழாவின் இறுதிநாளான நவம்பர் 14 ஆம் தேதி திருக்கல்யாண விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது .

தம்மை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மறவாமல் நிறைவேற்றி அவர்தம் துயரம் போக்கி வரும் வயலூர் முருகப்பெருமானை கந்தசஷ்டி விழாவில் வழிபாடு செய்து சகல நன்மைகளையும் நாம் பெருவோம் .

கந்த சஷ்டி விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.