×

வனத்துறைக்கு சொந்தமான பங்களாவில் பெண் ஊழியர்களுடன் உறங்கிய வனவர்கள்.. தற்காலிகமாக சஸ்பெண்ட்!

மாஞ்சோலை எஸ்டேட்டில் இருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கின்றனர். நெல்லை மாவட்டம் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் வானவராக பணியாற்றி வந்தவர் மோகன். அதற்கு சற்று அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் வனவராக பணியாற்றி வந்தவர் முருகேசன். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்து வரும் 3 பெண்களுடன் மாஞ்சோலை எஸ்டேட்டில் இருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான
 

மாஞ்சோலை எஸ்டேட்டில் இருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கின்றனர். 

நெல்லை மாவட்டம் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் வானவராக பணியாற்றி வந்தவர் மோகன். அதற்கு சற்று அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் வனவராக பணியாற்றி வந்தவர் முருகேசன். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்து வரும் 3 பெண்களுடன் மாஞ்சோலை எஸ்டேட்டில் இருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கின்றனர். 

தற்செயலாக அந்த பக்கம் ஆய்வுக்கு சென்ற வனத்துறை உயர் அதிகாரி முருகேசனும், மோகனும் பெண்களுடன் இருப்பதை கையும் களவுமாக பிடித்துள்ளார். அதுவும், வனத்துறை அதிகாரிகளின் விருந்தினர் மாளிகையில் சட்ட விரோதமாக இருந்த போது.  அவர்களின் இந்த செயலால், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. அப்போது அவர்கள் 5 பேரும் சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக தெரிவித்த முண்டந்துறை புலிகள் காப்பக ஹைரத் மோகன்தாஸ் மோகன் மற்றும் முருகேசனை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தும், பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.