×

லட்சுமணன் பிறந்த நட்சத்திரம் – ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுப் பலன்கள்

ஆயில்ய நட்சத்திரமானது ஒன்பதாவது நட்சத்திரம் ஆகும். ராமர் வனவாசம் புறப்பட்டபோது அவருடன் சென்று பணிவிடை செய்த லட்சுமணன் பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் ஆகும். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மென்மையான மனம் உடையவர்கள். கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். தொடர்ந்து கல்வி பயின்று கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அழகிய தோற்றம் கொண்டிருப்பார்கள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இனிக்க இனிக்க பேசுபவர்கள் என்பதால் மற்றவர்கள் மனதை எளிதில் கவர்ந்து விடுவார்கள். இவர்களுக்கு நகைச்சுவை உணர்வுடன் ஜாஸ்தி.
 

ஆயில்ய நட்சத்திரமானது ஒன்பதாவது நட்சத்திரம் ஆகும். ராமர் வனவாசம் புறப்பட்டபோது அவருடன் சென்று பணிவிடை செய்த லட்சுமணன் பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் ஆகும்.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மென்மையான மனம் உடையவர்கள். கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். தொடர்ந்து கல்வி பயின்று கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அழகிய தோற்றம் கொண்டிருப்பார்கள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இனிக்க இனிக்க பேசுபவர்கள் என்பதால் மற்றவர்கள் மனதை எளிதில் கவர்ந்து விடுவார்கள். இவர்களுக்கு நகைச்சுவை உணர்வுடன் ஜாஸ்தி. அதனால் ஆயில்ய நட்சத்திரக்காரர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் வலிமை, மனோதிடம் உடையவர்களாக இருப்பார்கள்.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை கணிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். மற்றவர்கள் சொல்லும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டிருப்பார்கள். ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் பெற்றோரிடம் அன்பும், மரியாதையும் அதிகமாக வைத்திருப்பார்கள். தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அதிகம் நேசிப்பார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த விஷயத்தையும் செய்ய மாட்டார்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். எத்தகைய சூழலிலும் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். தவறு செய்தவர்களைத் தட்டிக் கேட்க தயங்க மாட்டார்கள். வேலை செய்யும் இடத்தில் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.