×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராபர்ட் பயஸின் பரோல் மனு விசாரணை..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 7 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றம் பிறகு அதை ஆயுள் தண்டனையாக மாற்றியது. கைது செய்யப் பட்டவர்களுள் ஒருவரான ராபர்ட் பயாஸ், தனது மகனின் திருமணத்திற்காக 30
 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 7 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றம் பிறகு அதை ஆயுள் தண்டனையாக மாற்றியது. கைது செய்யப் பட்டவர்களுள் ஒருவரான ராபர்ட் பயாஸ், தனது மகனின் திருமணத்திற்காக 30 நாட்கள் பரோல் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். 

அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் விசாரித்தனர். அதில், 28 ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக் கிடந்த ராபர்ட் பயாஸ் தனது மகனின் திருமணத்திற்காக முதன்முறையாக பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். எனவே அவருக்கு பரோல் அளித்து அவரின் மகனின் திருமணத்தை நடத்த அனுமதி தர வேண்டும் என்று பயஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்த மொத்த அறிக்கையையும் சிறைத்துறை தாக்கல் செய்ய இருக்கிறது. அதனால் அதற்கு அவகாசம் அளித்து இந்த வழக்கை நவம்பர் மாதம் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அரசுத் தரப்பில் பதிலளிக்கக் கால அவகாசம் வழங்கி, இந்த வழக்கை நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.