×

ரஜினி நேரில் சென்று மக்கள் குறைகளை தீர்ப்பார்: சகோதரர் சத்தியநாராயணா

ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறதாம். ரஜினி அரசியலுக்கு வருவாரா?மாட்டாரா? என்ற கேள்வி 90 காலகட்டத்திலிருந்தே தொடங்கி விட்டது. ஆனால் அதற்கு இன்னும் கூட ஒரு தீர்வு கிடைக்கவில்லை. இருப்பினும் அடுத்த மாதம் ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறதாம். இந்நிலையில் தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவர் திருக்கோயிலில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா சாமி தரிசனம் செய்தார். அதன்
 

ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறதாம். 

ரஜினி அரசியலுக்கு வருவாரா?மாட்டாரா? என்ற கேள்வி 90 காலகட்டத்திலிருந்தே தொடங்கி விட்டது.  ஆனால்  அதற்கு இன்னும் கூட ஒரு தீர்வு கிடைக்கவில்லை. இருப்பினும் அடுத்த மாதம் ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறதாம். 

இந்நிலையில் தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவர் திருக்கோயிலில் ரஜினிகாந்தின் அண்ணன்  சத்தியநாராயணா சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ‘இந்த கோயிலுக்கு நாங்களாகவே வரவில்லை. பைரவர் தான் அழைத்தார். அதனால் இங்கு சிறப்பு பூஜைகள் செய்துள்ளோம். ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவர் மீது மக்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு  உள்ளது. அதை நிறைவேற்றுவார்.அவருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார். மக்கள் பிரச்சனைகளை நேரில் சென்று தீர்த்து வைப்பார் வைப்பார்’ என்றார்.