×

ரகசியமாக தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஐ எட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஐ எட்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பான்மையான மக்கள், டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள். அதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெரியமேடு மசூதியில் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்காமல், ரகசியமாக வங்க தேசத்தை சேர்ந்த 3 பேர் தங்கியிருந்துள்ளனர். இதனையறிந்த போலீசார் அங்கு சென்று
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஐ எட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஐ எட்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பான்மையான மக்கள், டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள். அதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெரியமேடு மசூதியில் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்காமல், ரகசியமாக வங்க தேசத்தை சேர்ந்த 3 பேர் தங்கியிருந்துள்ளனர். 

இதனையறிந்த போலீசார் அங்கு சென்று அந்த 3 பேரையும் கைது செய்து, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று மாநகராட்சி அதிகாரியிடம் பதிவு செய்யாததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதனிடையே அவர்கள் மூன்று பேருக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3 பேருக்குமே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மூன்று பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அப்பகுதி மக்களுடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.