×

மோடி ஹிந்தியை திணிக்கவில்லை : எஸ். குருமூர்த்தி ட்வீட்..

துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி ஹிந்தியைத் திணிக்கவில்லை என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணமாக விளங்குகிறது. வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம். இதை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் உள்ள புறநானூறு பாடல் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஐ.நா சபையில் கூறியுள்ளார். இதற்காகப் பல
 

துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி ஹிந்தியைத் திணிக்கவில்லை என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணமாக விளங்குகிறது. வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம். இதை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் உள்ள புறநானூறு பாடல் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஐ.நா சபையில் கூறியுள்ளார். 

இதற்காகப் பல தலைவர்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி ஹிந்தியைத் திணிக்கவில்லை என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், மோடி உண்மையில் உலகில் தமிழைத் திணிக்கிறார். உலகின் பழைய மொழியான தமிழின் தூதராக உள்ளார் என்றும், கிணற்றுத் தவளைகளாக இருக்கும் தமிழினவாதிகள் மோடி மீது குற்றச் சாட்டு வைப்பதோடு, அவர் ஹிந்தியைத் திணிக்கிறார் எனக் கூறுகின்றனர், என்றும் ட்வீட் செய்துள்ளார்.