×

மூல நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்கள்!

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம் மூலம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும்.இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான்.இந்த நட்சத்திரம் ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்கு உரியதாகும்.மூலம் நட்சத்திரம் வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள், கம்பீரமான
 

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்

மூலம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும்.இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான்.இந்த நட்சத்திரம் ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. 

மேலும் இந்த மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்கு உரியதாகும்.மூலம் நட்சத்திரம் வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். 

ஒழுக்க சீலர்கள், கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள்.ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த செல்வாக்குடன் வாழ்வார்கள்.

இந்த நட்சத்திரகாரர்கள் இரக்க சிந்தனை உள்ளவர்கள். இவர்களுக்கு அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறமை படைத்தவர்கள். 

தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள், வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்கு தயங்காதவர்கள்.

இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல் எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

பலரும் இவருக்கு கட்டுப்படுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுய ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக  இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும். பார்மசி, விவசாயம் சார்ந்த வியாபாரம் காய்கறி, பழம், தானியங்கள், கல்வித்துறை சார்ந்த பணி, ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவார்கள்.

 மூல நட்சத்திர பெண்கள் சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக இருப்பதால், அந்த பெண்கள் திருமணம் செய்து, வாழ்க்கை நடத்த புகுந்த வீடு செல்லும் பொழுது அங்கு தனது புத்தி சாலி தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.மேலும் நிர்வாக திறமை அதிகமாகவும் இருப்பார்கள்.

இதனால் இதுவரை குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை சொல்வார்கள்.அப்பொழுது கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார், ஆனால் மாமனார் ஏற்றுக் கொள்ள மறுப்பார் இதற்கு காரணம் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா என்று நினைப்பார்.

இதனால் மாமனாருக்கும், மருமகளுக்கும் அதிகாமாக சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் ஜோதிடத்தில் முலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனார் இறந்து விடுவார் என்று கூருகின்றனர்.எனவே மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனாருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதே ஜோதிடத்தில் உள்ள உண்மை ஆகும்.