×

மூன்றாவது திருமணம் செய்ய முயன்றவரை கும்மியெடுத்த முதல் இரண்டு மனைவிகள்!

இருபெண்களும் அவர்களது குடும்பமும் முதலில் வந்து காத்திருக்க, கடைசியாக லேட்டாக வந்திருக்கிறார் தினேஷ். காவல்நிலைய வாசலிலேயே காத்திருந்த இருவரும் தினேஷை கும்மியெடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்த காவல்நிலைய அதிகாரிகள் பிறகு மூன்றாவது திருமணம் குறித்து தினேஷிடம் முறையாக விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள். கோவை, சூலூரைச் சேர்ந்த அரவிந்த் தினேஷுக்கும், திருப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. கணவரின் கொடுமை தாங்காமல் திருமணமான 15ஆவது நாளிலேயே தாய்வீட்டிற்குச்
 

இருபெண்களும் அவர்களது குடும்பமும் முதலில் வந்து காத்திருக்க, கடைசியாக லேட்டாக வந்திருக்கிறார் தினேஷ். காவல்நிலைய வாசலிலேயே காத்திருந்த இருவரும் தினேஷை கும்மியெடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்த காவல்நிலைய அதிகாரிகள் பிறகு மூன்றாவது திருமணம் குறித்து தினேஷிடம் முறையாக விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

கோவை, சூலூரைச் சேர்ந்த அரவிந்த் தினேஷுக்கும், திருப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. கணவரின் கொடுமை தாங்காமல் திருமணமான 15ஆவது நாளிலேயே தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டார் பிரியதர்ஷினி. இதனைத்தொடர்ந்து, தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்த தினேஷ், இரண்டாவது திருமணத்திற்காக பெண் தேடி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருக்கிறார். அதன்படி, கரூரைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். முதல் ம்னைவியைப் போலவே, இரண்டாவது மனைவியையும் கொடுமைப்படுத்த, முதல் மனைவி போலவே இரண்டாவதாக ஏமாந்தவரும் 15 நாளிலேயே தாய்வீடு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பெண் தேதி திரும்பவும் திருமண தகவல் மையத்தில் தினேஷ் பதிவு செய்த விவரம் முதல் இரண்டு மனைவிகளுக்கும் தெரிய வந்திருக்கிறது. வெகுண்டெழுந்த இருவரும் பேசிவைத்து, தினேஷ் வேலைபார்க்கும் ராசிபுரம் தனியார் அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக களத்திற்கு வந்த காவல்துறையினர் தினேஷ், அவரது மனைவிமார்கள், மற்றும் குடும்பத்தினரை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வரச்சொல்லியிருக்கின்றனர். இருபெண்களும் அவர்களது குடும்பமும் முதலில் வந்து காத்திருக்க, கடைசியாக லேட்டாக வந்திருக்கிறார் தினேஷ். காவல்நிலைய வாசலிலேயே காத்திருந்த இருவரும் தினேஷை கும்மியெடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்த காவல்நிலைய அதிகாரிகள் பிறகு மூன்றாவது திருமணம் குறித்து தினேஷிடம் முறையாக விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.