×

மூச்சுத்திணறலுடன் சாலையில் கிடந்த முதியவர்கள்…உதவி செய்யாமல் விலகி சென்ற பொதுமக்கள்!

அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்று கூறப்படுவதால் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பழனியில் உள்ள பேருந்து நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டு மூதாட்டிகள் மூச்சு திணறலால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆள் இல்லாமல் கிடந்துள்ளனர். பழனியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 பேரும் மார்க்கெட்டுக்கு சென்று வந்ததால்,
 

அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்று கூறப்படுவதால் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பழனியில் உள்ள பேருந்து நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டு மூதாட்டிகள் மூச்சு திணறலால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆள் இல்லாமல் கிடந்துள்ளனர். 

பழனியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 பேரும் மார்க்கெட்டுக்கு சென்று வந்ததால், அந்த மூதாட்டிகளுக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் உடனே அங்கு சென்று இரண்டு மூதாட்டிகளையும் பரிசோதித்துள்ளனர். அதில் அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த இரண்டு மூதாட்டிகளும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.