×

மும்பையை விட சென்னையே வாழத் தகுந்த நகரம்… சிலாகித்த உயர் நீதி மன்ற நீதிபதி…

மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகிறது என்று சென்னையை பெருமைப் படுத்தி கூறியுள்ளார். சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்த தஹில் ரமணியை மேகாலயா நீதி மன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு ஒத்துழைக்காத தஹில் ரமணி மேகலாயாவிற்கு இடம் மாற்றம் செய்தால் தான் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகக் கூறி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அதன் பின், குடியரசுத் தலைவர் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று
 

மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகிறது என்று சென்னையை பெருமைப் படுத்தி கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்த தஹில் ரமணியை மேகாலயா நீதி மன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு ஒத்துழைக்காத தஹில் ரமணி மேகலாயாவிற்கு இடம் மாற்றம் செய்தால் தான் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகக் கூறி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அதன் பின், குடியரசுத் தலைவர் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று கொண்டார். அதன் படி, தஹில் ரமணி உயர் நீதி மன்ற நீதிபதி பதவியில் இருந்து விலகினார். 

தஹில் ரமணிக்காக இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில், பேசிய அவர் மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகிறது என்று சென்னையை பெருமைப் படுத்தி கூறியுள்ளார். இதில், தஹில் ரமணி சுமார் ஒன்றரை ஆண்டு காலம் மும்பை நீதிமன்ற நீதிபதியாக அங்கேயே இருந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.