×

முன்னறிவிப்பின்றி குடிசையை அகற்றிய அதிகாரிகள் : நிற்கதியாய் ரோட்டில் நின்ற நரிக்குறவர்கள்!

புதுச்சேரியை அடுத்த மதகடிபட்டியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடிசை வீடுகள் கட்டி நீண்ட காலமாக அங்குத் தங்கி வருகின்றனர். புதுச்சேரியை அடுத்த மதகடிபட்டியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடிசை வீடுகள் கட்டி நீண்ட காலமாக அங்குத் தங்கி வருகின்றனர். அதே பகுதியில் வாரந்தோறும் சந்தை போடுவதால், அந்த நேரங்களில் நரிக்குறவர்களின் குடிசைகள் பெரும் இடைஞ்சலாக இருப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து, அவர்களை அங்கிருந்து வெளியே செல்லுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அந்த மக்கள் மாற்று இடம்
 

புதுச்சேரியை அடுத்த மதகடிபட்டியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடிசை வீடுகள் கட்டி நீண்ட காலமாக அங்குத் தங்கி வருகின்றனர்.

புதுச்சேரியை அடுத்த மதகடிபட்டியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடிசை வீடுகள் கட்டி நீண்ட காலமாக அங்குத் தங்கி வருகின்றனர். அதே பகுதியில் வாரந்தோறும் சந்தை போடுவதால், அந்த நேரங்களில் நரிக்குறவர்களின் குடிசைகள் பெரும் இடைஞ்சலாக இருப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து, அவர்களை அங்கிருந்து வெளியே செல்லுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அந்த மக்கள் மாற்று இடம் வழங்கினால் உடனடியாக இங்கிருந்து காலி செய்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் சாலையோரம் இருக்கும் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினரும் நெடுஞ்சாலைத் துறையினரும் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதே போல, மதகடிபட்டியில் இருந்த நரிக்குறவர்களின் குடிசைகளை முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடிசைகளில்  நரிக்குறவர்கள் தங்கி வருவதாகக் கூறப்படுகிறது. 

குடிசைகளைப் பிரித்ததால் எங்குச் செல்வது என்று அறியாத நரிக்குறவர்கள் சாலையில் அமர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாகக் கூறி அவர்களைச் சமாதானம் செய்ததையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.