×

முத்துராமலிங்கத்தேவரின் வழியில் பிரதமர் மோடி தெய்வீக வழியில் தேசிய உணர்வை ஊட்டுகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், ஊரடங்கை மதிக்காமல் கும்பல் கும்பலாக சேர்ந்து கைதட்டியும், விளக்குகள் ஏற்றியும் நோயின் தீவிரத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன. கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், ஊரடங்கை மதிக்காமல் கும்பல் கும்பலாக சேர்ந்து கைதட்டியும், விளக்குகள் ஏற்றியும் நோயின் தீவிரத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ சமூக பரவலைத் தடுக்க
 

கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், ஊரடங்கை மதிக்காமல் கும்பல் கும்பலாக சேர்ந்து கைதட்டியும், விளக்குகள் ஏற்றியும் நோயின் தீவிரத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன. 

கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், ஊரடங்கை மதிக்காமல் கும்பல் கும்பலாக சேர்ந்து கைதட்டியும், விளக்குகள் ஏற்றியும் நோயின் தீவிரத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ சமூக பரவலைத் தடுக்க தீவிரமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும் போதுமான ஒத்துழைப்பை கொடுத்துவருகின்றனர். வல்லரசு நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனோ கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதற்கு காரணம் மத்திய அரசு எடுத்துள்ள கட்டுப்பாடுகளே.தேசியத்தையும் தெய்வீகத்தையும் உலகிற்கு பறைசாற்றி அரசியல் நடத்திய முத்துராமலிங்கத்தேவரின் வழியில் பிரதமர் மோடி தெய்வீக வழியில் தேசிய உணர்வை ஊட்டுகிறார்.

பிரதமரின் நடவடிக்கைகளையோ, முதலமைச்சரின் நடவடிக்கைகளையோ கிண்டல் செய்பவர்கள் சமூக விரோதிகள். குற்றம் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். குற்றம் சொல்பவர்கள் நிச்சயம் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். தொடக்கத்தில் ஊரடங்கு உத்தரவிற்காக கோவப்பட்டாலும் அதன்பின் நமது நலனுக்காகவே பிறப்பிக்கப்பட்டதாக மக்கள் புரிந்துகொண்டனர். பிரதமரின் அறிவுறுதலின் படி ஒளி ஏற்றியதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.