×

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1,20,000 வழங்கிய தூய்மை பணியாளர்கள்.. வியக்கவைக்கும் மனிதம்!

சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல, தமிழகத்தில் 1267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ
 

சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல, தமிழகத்தில் 1267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.  குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் இணைந்து ரூ.1,20,000 முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர். இதனை பற்றி பேசிய அவர்கள், உலகை அச்சுறுத்தும் இந்த நோயில் இருந்து மக்களை காக்க நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் இணைந்து எங்களால் முடிந்த நிதியை கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அதே போல நீலகிரி மாவட்ட ஆட்சியர், அவரின் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.