×

முதல்வர் எடப்பாடி துவங்கி வைத்த  உணவுத் திருவிழா! கையை கழுவ கூட சொட்டு தண்ணீ கிடையாது!

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் மதராசபட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு-கலாச்சார திருவிழா சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இங்கு விதவிதமான சுவையுடன் கூடிய சைவ, அசைவ உணவுகள் தனித்தனி அரங்குகளில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த உணவுத் திருவிழாவை நேற்று நேரில் சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, சத்தான, சுகாதாரமான, செறிவூட்டப்பட்ட, சரிவிகித உணவைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையோடு தமிழ்நாடு அரசால் விழிப்புணர்வு
 

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் மதராசபட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு-கலாச்சார திருவிழா சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இங்கு விதவிதமான சுவையுடன் கூடிய சைவ, அசைவ உணவுகள் தனித்தனி அரங்குகளில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த உணவுத் திருவிழாவை நேற்று நேரில் சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, சத்தான, சுகாதாரமான, செறிவூட்டப்பட்ட, சரிவிகித உணவைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையோடு தமிழ்நாடு அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  நமது உடல்நலத்திற்காக பின்பற்றப்பட வேண்டிய வாழ்க்கை முறைகள், உண்ண வேண்டிய சத்தான உணவு வகைகள், உடல் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு, ஆலோசனைகளைப் பெற்று, ஆரோக்கியமான தமிழ்நாட்டினை சமுதாயத்தினை உருவாக்கவேண்டும். மத்திய அரசு உணவுத் திருவிழாவை, பல்வேறு நகரங்களில் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தான் பாதுகாப்பான உணவு, சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு, உணவு சார்ந்த தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், சத்து குறைபாடுகள், தடுப்பு முறைகள், ஆகியவை குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த மதராசபட்டினம் விருந்து விழா, மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது என்று உணர்ச்சி பொங்க பேசி விட்டு, தீவுத்திடலில் அதிரசம், முறுக்கு எல்லாம் சாப்பிட்டு விட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

முதலமைச்சருடன்  விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு உணவு, கலாசாரத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக தீவுத்திடலில் சாப்பிட்டு விட்டு கையை கழுவி விட்டு சென்றார்கள். நேற்று தான் உணவு திருவிழா ஆரம்பித்த நிலையில், இன்று காலை சனிக்கிழமை விடுமுறை தினமாக இருப்பதால் ஆர்வமுடன் உணவுத் திருவிழாவில் கலந்துக் கொள்வதற்காக வந்திருந்த பொதுமக்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பெயரளவிற்கு கூட சாப்பிட்டு விட்டு கையைக் கழுவுவதற்கோ, அவசரத்திற்கு குடிப்பதற்கோ ஒரு சொட்டு தண்ணீர் கூட தீவுத்திடலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால், ஏற்பாடு செய்யப்படவில்லை.

தண்ணீரே இல்லாமல் எப்படி புத்திசாலித்தனமா உணவுத் திருவிழா நடத்துகிறார்கள்? என்று உணவுத் திருவிழாவிற்கு வந்த பொதுமக்கள் முகம் சுளித்தார்கள்… 
ஒரு சாப்பாடு பார்சே…ல்!