×

முதலில் படிப்பு… அப்புறம் தான் கல்யாணம்… காதலர்களைப் பிரித்து வைத்த நீதிபதி!

நெல்லையைச் சேர்ந்தவர், மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில், தனது மகள் 19 வயதுடைய வாலிபர் ஒருவரைத் திருமணம் செய்துக் கொண்டு சென்னைக்குச் சென்று விட்டார். இதனால் என்னுடைய மகளுடைய கல்லூரி படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மகளை மீட்டு, மேற்கொண்டு அவள் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். நெல்லையைச் சேர்ந்தவர், மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு
 
நெல்லையைச் சேர்ந்தவர், மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில், தனது மகள் 19 வயதுடைய வாலிபர் ஒருவரைத் திருமணம் செய்துக் கொண்டு சென்னைக்குச் சென்று விட்டார். இதனால் என்னுடைய மகளுடைய கல்லூரி படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மகளை மீட்டு, மேற்கொண்டு அவள் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலரைத் திருமணம் செய்துக் கொண்டு சென்னை சென்றிருந்த அந்த மாணவியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாணவியை அழைத்துச் சென்ற வாலிபரின் பெற்றோர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும், மாணவியை தொடர்ந்து படிக்க வைக்க ஒத்துழைப்பு தருவதாகக் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மாணவிக்கு நீதிபதிகள் அறிவுரைகளை வழங்கினார்கள்.

18 வயது நிரம்பிய மாணவி பெற்றோர் வசம் செல்ல விரும்பாததால் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிக்க வேண்டும். பின்னர் இருவருக்கும் 21 வயது பூர்த்தியானதும் தங்கள் பெற்றோர் விருப்பத்தையும் பெற்று திருமண வாழ்க்கையைத் தொடங்கலாம்.  முதலில் படிப்பு தான் முக்கியம். படித்து முடித்தப்  பின்னர் தான் திருமணம் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கையும் முடித்து வைத்தனர்.