×

மீண்டும் சென்னையை மிரட்டும் பவாரியா கொள்ளையர்கள்! கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தகவல்!!

நங்கநல்லூரில் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை 5 மணி நேரத்தில் அடையாளத்தை கண்டுபிடிக்க சி சி டிவி காட்சிகள் உதவியதாக பிரேம் ஆனந்த் தெரிவித்தார். சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி பகுதியை சேர்ந்த ரமேஷ், கடந்தவாரம் சுற்றுலா சென்றிருந்தார். இதனை அறிந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து 120 சவரன் தங்க நகைகள், 10 சவர வைர நகைகள், 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி
 

நங்கநல்லூரில் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை 5 மணி நேரத்தில் அடையாளத்தை கண்டுபிடிக்க சி சி டிவி காட்சிகள் உதவியதாக பிரேம் ஆனந்த் தெரிவித்தார்.

சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி பகுதியை சேர்ந்த ரமேஷ், கடந்தவாரம் சுற்றுலா சென்றிருந்தார். இதனை அறிந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து 120 சவரன் தங்க நகைகள், 10 சவர வைர நகைகள், 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து மத்தியப் பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை கைதுசெய்தனர். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, “கொள்ளையர்களை சாமர்த்தியமாக சுற்றி வளைத்த தனிப்படைக்கு பாராட்டுக்கள். பவாரியா கொள்ளையர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. சிசிடிவி காட்சிகள் மூலமே கொள்ளையர்களை விரைவில் பிடிக்க முடிந்தது” என்று கூறினார்.