×

மின் இணைப்பு கட்டணத்தொகைக்கு சலுகை அளிக்க வேண்டும் : டிடிவி தினகரன் ட்வீட்!

மின்கணக்கெடுப்பு எடுக்க முடியாததால், கடந்த மாத கட்டணத்தையே இந்த மாதமும் செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிய உள்ள நிலையில், மீண்டும் நீட்டிக்கப்படும் என தெரிகிறது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இச்சூழலில் மின்கணக்கெடுப்பு எடுக்க முடியாததால், கடந்த
 

மின்கணக்கெடுப்பு எடுக்க முடியாததால், கடந்த மாத கட்டணத்தையே இந்த மாதமும் செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிய உள்ள நிலையில், மீண்டும் நீட்டிக்கப்படும் என தெரிகிறது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இச்சூழலில் மின்கணக்கெடுப்பு எடுக்க முடியாததால், கடந்த மாத கட்டணத்தையே இந்த மாதமும் செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த முறை செலுத்திய அதே மின்கட்டணத்தை இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வீடுகளுக்கு சரியாக இருக்கலாம்.ஆனால் 15 நாட்களுக்கும் மேலாக சிறு குறுதொழிற்சாலைகள்,வணிகநிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு இது சிரமத்தை தரும். எனவே வணிகரீதியான மின் இணைப்புகளுக்கு கட்டணத்தொகை மற்றும் கால அவகாசத்தில் உரிய சலுகை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.