×

மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 1242பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 38பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 15 நபருக்கு மேல் ஒரு மாவட்டத்தில் கொரொனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால் அந்த மாவட்டம் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும்
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 1242பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 38பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 15 நபருக்கு மேல் ஒரு மாவட்டத்தில் கொரொனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால் அந்த மாவட்டம் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.