×

மாநகராட்சியில் ‘பாஸ்’ வாங்கிவிட்டு வெளியே வாங்க! – தமிழக அரசு அதிரடி

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிக்காக பாஸ் பெற்றுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள், ஊடக
 

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் அத்தியாவசிய பணிக்காக பாஸ் பெற்றுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  பொதுப் பயன்பாடுகள், ஊடக சேவை, சுகாதாரம், மருத்துவ சேவைகளில் ஈடுபடுவோர், ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம். வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணி புரிவோரும் ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம். சென்னை மாநகராட்சியில் தலைமை அலுவலகம், 4 மண்டல அலுவலகங்களில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது.