×

மாணவிகளை சீண்டியபடி நடனமாடும் பஸ் ஊழியர் ! நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கொந்தளிப்பு !

பள்ளி மாணவிகளை கிண்டல் செய்யும் விதமாக தனியார் பேருந்து ஊழியர் டிக்டாக்கில் நடனமாடி வீடியோ வெளியிட்ட காட்சிகள் கோவில்பட்டியில் நடந்துள்ளது. பள்ளி மாணவிகளை கிண்டல் செய்யும் விதமாக தனியார் பேருந்து ஊழியர் டிக்டாக்கில் நடனமாடி வீடியோ வெளியிட்ட காட்சிகள் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பேருந்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இந் நிலையில், பேருந்தில் ஏறும் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்யும் விதமாக பேருந்து ஊழியர்
 

பள்ளி மாணவிகளை கிண்டல் செய்யும் விதமாக தனியார் பேருந்து ஊழியர் டிக்டாக்கில் நடனமாடி வீடியோ வெளியிட்ட காட்சிகள் கோவில்பட்டியில் நடந்துள்ளது.

பள்ளி மாணவிகளை கிண்டல் செய்யும் விதமாக தனியார் பேருந்து ஊழியர் டிக்டாக்கில் நடனமாடி வீடியோ வெளியிட்ட காட்சிகள் கோவில்பட்டியில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பேருந்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் என  ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இந் நிலையில், பேருந்தில் ஏறும் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்யும் விதமாக பேருந்து ஊழியர் போல் உடை அணிந்த நபர் பாட்டுப்பாடி நடனமாட, அது வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது. பெண்களை அதிலும் குறிப்பாக மாணவிகளை அனுமதியின்றியும் அவர்களை அவமதிக்கும் வகையிலும் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ குற்றம் என்கிற நிலையில், இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடைபெற்ற விசாரணையில், நடனமாடும் அந்த நபர் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் கமிஷன் அடிப்படையில் தனியார் பேருந்துகளில் பயணிகளை ஏற்றும் வேலையைச் செய்து வருபவர் என்று கூறப்படுகிறது.

மாணவிகளை சீண்டும் வகையில் அந்த நபர் நடந்துகொள்வதை பேருந்து நடத்துனர் கண்டுகொள்ளாமல் சிரித்தபடியே செல்லும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிக் டாக்கில் தனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவா இல்லை என்ற அடிப்படையில் பல பெண்களும், ஆண்களும் வீடியோக்கள் பதிவேற்றி வருகின்றனர். அவர்கள் அப்படி செய்யும் கோமாளி காட்சிகள் சாதாரண எடுத்துக் கொண்டு செல்பவர்களும் பலர். சிலர் இந்த காட்சிகளை பிரச்சனையாக்கி டிரெண்டிங் செய்பவர்களும் சிலர்.