×

மழைக்கால பாதிப்புகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக முதல்வர்..!

செப்டம்பர் 23 ஆம் தேதி முதல்வர் தலைமையில் பருவ மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடக்கவிருக்கிறது தமிழகத்தில் கடந்த ஆண்டு பொழிந்த பருவ மழையின் காரணமாக பல பகுதியில் உள்ள வீடுகள் வெள்ளக் காடாக மாறின. முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்காததால் பல்லாயிரக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. மேலும், சென்னையை தாக்கிய வர்தா புயலும், வெள்ளமும் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. உண்ண உணவு இல்லாமலும்,
 

செப்டம்பர் 23 ஆம் தேதி முதல்வர் தலைமையில் பருவ மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடக்கவிருக்கிறது

தமிழகத்தில் கடந்த ஆண்டு பொழிந்த பருவ மழையின் காரணமாக பல பகுதியில் உள்ள வீடுகள் வெள்ளக் காடாக மாறின. முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்காததால் பல்லாயிரக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. 

 மேலும், சென்னையை தாக்கிய வர்தா புயலும், வெள்ளமும் மக்களின் வாழ்க்கையை  புரட்டிப் போட்டது. உண்ண உணவு இல்லாமலும், உடுத்த உடை இல்லாமலும் மக்கள் தவித்ததை யாராலும் மறக்க இயலாது. 

இத்தகைய பிரச்சனை மீண்டும் நிகழாமல் இருக்க, செப்டம்பர் 23 ஆம் தேதி முதல்வர் தலைமையில் பருவ மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில், பல்வேறு துறை செயலர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோர் கலந்துக்க கொள்ள இருப்பதாக தகவல்கல் வெளியாகின்றன.