×

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் : நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஒரு அரசியல்வாதியாக, மக்கள் பிரதிநிதியாக, ஒரு கட்சியின் தலைவராக தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருந்தவர். தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர்… 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வின் தலைவராக நீடித்தவர்… பழுத்த அரசியல்வாதி… கலையுலகிலும், அரசியல் வாழ்விலும் பிறகு முன் உதாரணமாக திகழ்ந்தவர். முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்றெல்லாம் தமது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டிணம் மாவட்டம்
 

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி  ஒரு அரசியல்வாதியாக, மக்கள் பிரதிநிதியாக, ஒரு கட்சியின் தலைவராக தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருந்தவர். தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர்… 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வின் தலைவராக நீடித்தவர்… பழுத்த அரசியல்வாதி… கலையுலகிலும், அரசியல் வாழ்விலும் பிறகு முன் உதாரணமாக திகழ்ந்தவர்.

முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்றெல்லாம் தமது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டிணம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு ஜூன் 3ம் தேதி, 1924ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தம்மை சமூக இயக்கங்களில் இணைத்துக் கொண்ட கருணாநிதி, நீதிக் கட்சியில் இணைந்து, அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். தமிழ்நாட்டில் திராவிட இயக்க மாணவர் அணியை முதன்முதலாகத் தொடங்கியவரும் இவர்தான்.

தாம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதன்முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.அண்ணா மறைவுக்குப் பின்னர் 1969 ல் முதல்முறையாக முதலமைச்சரானார். அப்பதவியில் 1971 ம் ஆண்டு வரை நீடித்தார். தொடர்ந்து 1971முதல் 1976 வரை 2வது முறையும், 89 முதல் 91 வரை மூன்றாவது முறையும், 1996 முதல் 2001 வரை நான்காவது முறையும் 2006 முதல் 2011 வரை ஐந்தாவது முறையும் முதலமைச்சராக இருந்தார். கருணாநிதி மறைந்தாலும் அவர் தோற்றுவித்த திமுக என்னும் சூரியன் இன்றும் பிரகாசமாக சுட்டுக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளான இன்று அவரின் நினைவிடத்தில் அக்கட்சியின் தலைவரும் மகனுமான மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துரைமுருகன், டி. ஆர். பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.