×

மருந்து வாங்க போன கணவருக்கு ஏற்பட்ட நிலை: கொளுத்தும் வெயிலில் நடந்தே சென்று மீட்ட கர்ப்பிணி மனைவி!

ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். நாடு முழுவதும் கடந்த 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை முடிவடைகிறது. இருப்பினும் மீண்டும் நாளை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் கோரிப்பாளையம்
 

ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.   

நாடு முழுவதும் கடந்த 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை முடிவடைகிறது. இருப்பினும் மீண்டும் நாளை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் செல்லாமல் இருக்க  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.   

இந்நிலையில் கோரிப்பாளையம் அருகே உள்ள ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது  அவரை  கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் அருகே போலீசார் வழிமறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் தனது கர்ப்பிணி மனைவிக்கு மருந்து  செல்வதாக கூற போலீசார் அதை நம்ப மறுத்து அவரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து கார்த்திக்  போனில் மனைவியிடம் சொல்ல, அவரின் கர்ப்பிணி மனைவி கொளுத்தும் வெளியில் நடந்தே ஏ.வி.மேம்பாலத்திற்கு வந்து போலீசாரிடம் எடுத்துக்கூறி கணவரையும், வாகனத்தையும் மீட்டு சென்றுள்ளார். போலீசாரின் தொடர் உழைப்பும், பணியும் பாராட்டுக்குரியது என்றாலும், சில நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்வதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.