×

மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் உயிரிழக்க நேர்ந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி!

காவலர்,உள்ளாட்சி, தூய்மை பணியாளர்கள் இறந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குராக இருந்த மருத்துவர் சைமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மருத்துவர் சைமனின்
 

காவலர்,உள்ளாட்சி, தூய்மை பணியாளர்கள் இறந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குராக இருந்த மருத்துவர் சைமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சைமன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமயிடம் தங்களுக்கு உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். இச்சம்பவம் அனைவரின் மனதையும் உருக்கியது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள், காவலர்,உள்ளாட்சி, தூய்மை பணியாளர்கள் இறந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

மேலும், உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்புடனும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.