×

மருத்துவ மனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்..அதிர்ச்சியில் சென்னை வாசிகள்!

இதுவரை தமிழகத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் 5,000ஐ நெருங்கிக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கி வருகிறது. இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் தீவிரமாகிக் கொண்டே வந்து கொண்டிருப்பினும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள்
 

இதுவரை தமிழகத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் 5,000ஐ நெருங்கிக் கொண்டே வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 447  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கி வருகிறது. இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் தீவிரமாகிக் கொண்டே வந்து கொண்டிருப்பினும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் 5,000ஐ நெருங்கிக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடிவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சின்மயா நகரை சேர்ந்த 43 வயதான அந்த நபர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், அவருக்கு கடந்த 12 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.