×

மனநலம் பாதிக்கப்பட்ட மகனைப் பெற்றோரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி ‘பசியில்லா தமிழகம்’ என்னும் அமைப்பை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி ‘பசியில்லா தமிழகம்’ என்னும் அமைப்பை நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பின் மூலம், ஆதரவற்ற நபர்களைக் காப்பகங்களில் சேர்ப்பது, காணாமல் போனவர்களை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைப்பது போன்ற தொண்டுகளைச் செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், திருச்செங்கோடு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் உடம்பில் படுகாயங்களுடன் ஒருவர் கீழே கிடந்துள்ளார். அவரை மீட்டு,
 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி ‘பசியில்லா தமிழகம்’ என்னும் அமைப்பை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி ‘பசியில்லா தமிழகம்’ என்னும் அமைப்பை நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பின் மூலம், ஆதரவற்ற நபர்களைக் காப்பகங்களில் சேர்ப்பது, காணாமல் போனவர்களை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைப்பது போன்ற தொண்டுகளைச் செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், திருச்செங்கோடு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் உடம்பில் படுகாயங்களுடன் ஒருவர் கீழே கிடந்துள்ளார். அவரை மீட்டு, உணவளித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். அதன் பின் அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து அவரது உறவினர்களைத் தேடி வந்துள்ளனர். 

அப்போது அந்த குழுவினருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், ‘ மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் பெயர் மனோகரன், அவர் தன் மகன் என்றும் 12 வருடங்களுக்கு முன்னர் அவன் காணாமல் போகியதாகவும் கூறியுள்ளனர். அதன் பிறகு, அந்த இளைஞர்கள் அவர்களை நேரில் வரவழைத்துள்ளனர்.

அந்த பெற்றோர்களை விசாரித்ததில், பன்னீர் செல்வம்- ராஜம்மாள் தம்பதியினர் கள்ளக் குறிச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு இரண்டு மகன் இருந்ததாகவும், அதில் மூத்த மகன் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் கூறியுள்ளனர். மேலும், கடந்த 2007 ஆம் ஆண்டு சிகிச்சைக்காகக் கோயம்புத்தூர் அழைத்துச் சென்ற போது அவனைத் தவறவிட்டதாகவும் கூறியுள்ளனர். அதனையடுத்து, மனோகரனை அந்த இளைஞர்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இது குறித்துப் பேசிய மனோகரனின் பெற்றோர், 12 ஆண்டுகள் கழித்து தன் மகனை மீண்டும் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் மகனை எங்களிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கும் காவல் அதற்கு உதவிய காவல்துறையினருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.