×

மதுபாட்டில்களை குடிமகன்களிடம் இருந்து காப்பாற்ற திருச்சி மாநகராட்சியின் புதிய முயற்சி!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி
 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது.

இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை, குடிமகன்களிடம் இருந்து காக்கும் பொருட்டு திருச்சி மாநகராட்சி ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது. டாஸ்மாக் இருக்கும் எல்லா இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடுவது எளிதல்ல என்பதால், அனைத்து மது பாட்டில்களையும் ஒரே இடத்துக்கு கொண்டு வந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்தது. அதன் படி, போலீசாரின் உதவியுடன் டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் ஒரு மண்டலத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.