×

மண்டபத்தை பூட்டிக் கொண்டு உள்ளே நடந்த சுப நிகழ்ச்சி.. ஏராளமானோர் கலந்து கொண்டதால் வழக்குப்பதிவு!

கொரோனா பீதியின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதியின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல சுப நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் அவரவர் வீட்டிலேயே திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இப்போது இருக்கும் சூழலில் திருமணத்தில் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே இருக்கும் தனியார் மண் டபத்தில் தீட்சிதர் ஒருவரின் சுப நிகழ்ச்சி நடைபெற்றது.
 

கொரோனா பீதியின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பீதியின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல சுப நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் அவரவர் வீட்டிலேயே திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இப்போது இருக்கும் சூழலில் திருமணத்தில் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தியது. 

இந்நிலையில்,சிதம்பரம்  நடராஜர் கோயில் அருகே இருக்கும் தனியார் மண் டபத்தில் தீட்சிதர் ஒருவரின் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அரசின் உத்தரவை மீறி பலர் கலந்து கொண்ட நிலையில், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலை  கடைபிடிக்காமலும், மண்டபத்தின் கதவைப் பூட்டிக் கொண்டு, நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனே அங்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர், மண்டபத்தின் கதவு திறக்கப்படவில்லை என்றால் கதவு உடைத்து திறக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் கூறியுள்ளனர். அதன் பின்னர் மண்டபத்தின் உள்ளே இருந்து சிலர் வெளியே வர, அவர்களை போலீசார் எச்சரித்துள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.