×

போலீஸ் அதிகாரி கொடுத்த மது விருந்து: தொழிலதிபர் மரணம்!

நட்சத்திர ஒட்டலில் கூடுதல் ஏ.டி.ஜி.பி கொடுத்த மதுவிருந்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: நட்சத்திர ஒட்டலில் கூடுதல் ஏ.டி.ஜி.பி கொடுத்த மதுவிருந்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூடுதல் ஏ.டி.ஜி.பி சந்திப் ராய் ரத்தோர் என்பவர் விருந்து ஒன்று வைத்துள்ளார். அதில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
 

நட்சத்திர ஒட்டலில் கூடுதல் ஏ.டி.ஜி.பி கொடுத்த மதுவிருந்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: நட்சத்திர ஒட்டலில் கூடுதல் ஏ.டி.ஜி.பி கொடுத்த மதுவிருந்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 28 ஆம் தேதி  சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  கூடுதல் ஏ.டி.ஜி.பி சந்திப் ராய் ரத்தோர் என்பவர் விருந்து ஒன்று வைத்துள்ளார். அதில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் 72 வயதான தொழிலதிபர் ரமேஷ் ஜெய் துலானி மற்றும் 76 வயதான மிர்துன் ஜெய்சிங் இருவரும் கலந்து கொண்டனர். மதுவிருந்து முடித்து போதையில் எஸ்கலேட்டரில் இறங்கியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் ரமேஷ் ஜெய் துலானி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் மிர்துன் ஜெய்சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீசார், இந்த விவகாரம் குறித்துத் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.